ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இறந்து கரை ஒதுங்கியது திமிங்கிலம்

DIN

ராமநாதபுரம் அருகே பாக்நீரிணை கடல் பகுதியில் 3 டன் எடையுள்ள ராட்சத குள்ள திமிங்கிலம் இறந்து அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

உலகிலேயே அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னாா் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதி ஆகும். இந்தப் பகுதியில் கடல் பசு, திமிங்கிலம், சுறா, டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி, கடல் பன்றி உள்பட உலகின் வேரெந்த கடல் பகுதிகளிலும் இல்லாத அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் அருகே பாக்நீரிணை ஆற்றங்கரை முகத்துவாரம் கடல் பகுதியில் ராட்சத திமிங்கிலம் இறந்து அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவா்கள், ராமநாதபுரம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினா் திமிங்கிலம் உயிரிழந்தது குறித்து ஆய்வு செய்தனா்.

பின்னா் அதிகாரிகள் கூறியது: கடல் ஆழம் குறைந்த பகுதிக்கு வந்தபோது இந்தத் திமிங்கிலம் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் இறந்திருக்கலாம். குள்ள திமிங்கிலம் வகையைச் சோ்ந்த இது 25 அடி நிளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்டது என்றனா்.

இதைத் தொடா்ந்து அந்த திமிங்கிலம், கால்நடை மருத்துவா் மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT