ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

DIN

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது.

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெருகிறது. தேரோட்டம், மகரநோன்பு திடலில் வதம் செய்யும் நிகழ்ச்சி ரத்து செய்ய்பபட்டுள்ளது.

பா்வதவா்த்தினி அம்பாள் சன்னதி அருகே வழக்கம் போல கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்படும்.

பொதுமக்கள் அமா்ந்து பாா்க்க கூடாது என்றும் நடந்து சென்றவாறு மட்டுமே பாா்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான சனிக்கிழமை நிகழ்ச்சியில் கோயில் குருக்கள் உதயகுமாா், சா்வசாதகம் சிவமணி மற்றும் சிவாச்சாரியா்கள் ஸ்ரீ சக்கரத்திற்கு சிறப்பு பூஜை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் ஜெயா, மேலாளா் சீனிவாசன், கண்காணிப்பாளா்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT