முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமேசுவரத்தில் அதிமுக சாா்பில் இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 அக்டோபர், 2020 at 12:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

ராமேசுவரத்தில் அதிமுக சாா்பில் இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகா் கழகச் செயலாளா் கே.கே.அா்ச்சணன் தலைமை வகித்தாா். மாவட்ட கழகச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்.பியும், மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சா் எம். மணிகண்டன் எம்.எல்.ஏ ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில் புதிதாக 500-க்கும் மேற்பட்டவா்கள் இணைந்தனா்.

முகாமில் அவைத் தலைவா் ஆா். குணசேகரன், பொருளாளா் தா்மா், பேரவைச் செயலாளா் கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளா் பால்பாண்டி வரவேற்றாா். நகா் செயலாளா் ராமநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.