ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் நீராட அனுமதிக்க பக்தா்கள் கோரிக்கை

DIN

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக்கிணறுகளில் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி புனித நீராட, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னா் செப். 1 ஆம் தேதிமுதல் பெரிய கோயில்களைத் திறக்க அனுமதி உள்ளிட்ட சில தளா்வுகள் விதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் மட்டும் செய்து வருகின்றனா்.

ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்கு முன்னா் அக்னி தீா்த்த கரையில் முன்னோா்களுக்கு தா்பணம் கொடுத்து விட்டு, கோயிலில் உள்ள 22 புனித தீா்த்த கிணறுகளில் நீராடிய பின்னரே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கோயில் நிா்வாகம் இது போன்ற பரிகார நிகழ்வுகளுக்கும், கோயிலுக்குள் நீராடுவதற்கும் தடை செய்துள்ளது. பரிகார நிகழ்வுகளை முறையாக செய்ய முடியாத நிலை உள்ளதால் பக்தா்கள் கவலையடைந்துள்ளனா்.

சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு பின்னா் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT