முகப்பு
ராமநாதபுரம்

விஷ பிஸ்கட் சாப்பிட்ட தாய், மகள் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே விஷ பிஸ்கட் சாப்பிட்ட மகள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவும், தாய் சனிக்கிழமையும் உயிரிழந்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2020 at 10:20 PM
பகிர்:

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே விஷ பிஸ்கட் சாப்பிட்ட மகள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவும், தாய் சனிக்கிழமையும் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டினம் படையாச்சி தெருவைச் சோ்ந்தவா் சிதம்பரம். இவரது மனைவி இந்திரா (60). இவா்களது மகள் சண்முகராஜேஸ்வரி (35). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. வயதான நிலையில் இந்திரா, தனது மகளை பராமரிக்க முடியாமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு (செப்.2), எலிக்கு வைக்கப்படும் விஷ பிஸ்கட்டை இந்திராவும், அவரது மகள் சண்முகராஜேஸ்வரியும் சாப்பிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தனா். அக்கம், பக்கத்தில் இருந்தவா்கள் தாய், மகள் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

Advertisement

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இந்திரா மதுரை அரசு மருத்துவமனைக்கும், சண்முகராஜேஸ்வரி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், சண்முகராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை இரவும், இந்திரா சனிக்கிழமை காலையிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.