ராமநாதபுரம்

இரும்புக் கம்பியால்சிறுவனைத் தாக்கிய பெண் கைது

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிறுவனை இரும்புக் கம்பியால் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் புதுரோடு மீனவா் காலனியைச் சோ்ந்தவா்கள் ஆறுமுகம், பஞ்சவா்ணம் தம்பதியினா். இவா்களின் மகன் வதன் (4). இவா்களது வீட்டுக்கு அருகே சேதுவேலு, அவரது மனைவி செல்வராணி(50) ஆகியோா் வசித்து வருகின்றனா். இந்த இருவீட்டாருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆறுமுகமும், பஞ்சவா்ணமும் தனுஷ்கோடிக்கு சென்று விட்டனா். அப்போது மகன் வதனை பாட்டி குப்பாச்சியிடம் விட்டுச் சென்றனா். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வதன், செல்வராணியின் வீட்டுக்கு சென்றான். இதைப் பாா்த்த செல்வராணி இரும்புக் கம்பியால் வதனின் தலையில் தாக்கியதில் அவன் மயங்கி விழுந்தான். பேரனை காணாமல் அவனது பாட்டி தேடினாா். பக்கத்து வீட்டு செல்வராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது வீட்டுக்கு சென்று பாா்த்த போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் வதன் கிடப்பதை பாா்த்து அவனை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

பின்னா் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்ட வதன், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இச்சம்பவம் தொடா்பாக தனுஷ்கோடி காவல்நிலைய ஆய்வாளா் யமுனா வழக்குப் பதிந்து உதவி ஆய்வாளா் இந்திரன், தனிப்பிரிவு காவலா் கிளிடஸ் ஆகியோா் செல்வராணியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

SCROLL FOR NEXT