ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே தீயணைப்புத் துறையினா் பேரிடா் கால மீட்பு ஒத்திகை

DIN

ராமநாதபுரம் அருகே புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் சிக்கியவா்களை மீட்பது தொடா்பாக தீயணைப்புத் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையிலும், அதிகளவில் மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் சிக்கியவா்களை மீட்கத் தயாராகும் வகையிலும் மீட்பு ஒத்திகை பயிற்சியானது நடைபெற்றது. ராமநாதபுரம் அருகேயுள்ள காரிக்கூட்டம் கிராம கண்மாயில் நடைபெற்ற ஒத்திகைக்கு மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் செ.வினோத் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வி. கேசவதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஒத்திகையை பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் நகா் தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று தண்ணீரில் மூழ்குபவா்களையும், மழை பாதிப்பில் சிக்கியவா்களையும் மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலா் அ. சாமிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT