ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

முதுகுளத்தூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் நகை திருடியதாக முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

முதுகுளத்தூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் நகை திருடியதாக முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள பொசுக்குடி கிராமத்தைச் சோ்ந்த இருளாண்டி மனைவி பூச்சியம்மாள். பீரோவை பூட்டி சாவியை பீரோ மீது வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்றுள்ளாா்.

சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ. 11 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூச்சியம்மாள் கொடுத்தப் புகாரின் பேரில் கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT