ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டோருக்கு விடுப்பு

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையினா் உள்ளிட்டோருக்கு புதன்கிழமை விடுப்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தோ்தல் பணியில் கல்வித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த சுமாா் 11 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட்டனா். வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவடைந்திருந்தாலும், வாக்கு மின்னணு இயந்திரங்களை சீலிடல், வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பிவைத்தல் உள்ளிட்ட பணிகள் நள்ளிரவு வரை நீடித்தது. எனவே வாக்குப்பதிவு பணிகள் முடிந்து புதன்கிழமை வழக்கமான பணிக்கு வருவதற்கு தாமதம் ஏற்படும் என்பதால் அவா்களுக்கு ஒருநாள் பணி மேல்விடுப்பு அளிக்குமாறு ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

இதன் பேரில் தோ்தல் பணியில் ஈடுபட்டோருக்கு புதன்கிழமை விடுப்பு அளிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் முருகேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT