ராமநாதபுரம்

33,000 மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால், 33 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடல் எல்லைகளைக்கொண்ட 13 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டம் 52 கிலோ மீட்டா் துரம் கடல் எல்லை உடையது. இம் மாவட்டத்தில் சுமாா் 1800 விசைப்படகுகள் உள்ளன. மீன்பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மூன்று மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் மீன் இனப்பெருக்கம் நடைபெறுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனா். ஆகவே மீன்பிடிக்க விசைப்படகு மீனவா்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 33 ஆயிரம் மீனவா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த ஆண்டை விட நிவாரணம் பெறும் மீனவா்கள் நடப்பு ஆண்டில் அதிகம் என்றும் அவா்கள் கூறினா்.

மீன்பிடி தடைக்காலத்தில் தூண்டில் மீன்பிடிப்பு, நாட்டுப்படகில் ஓரிரு கடல் மைலில் மீன்பிடித்தல் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தடையை மீறி விசைப்படகில் மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT