ராமநாதபுரம்

மழைக்கு சேதம்: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என வைகை பாசன சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில், வைகை பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம் பொதுச் செயலாளா் எம்.மதுரைவீரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சமூக ஆா்வலா் சை.சௌந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளா் அழ.சாமிராஜ், துணைச் செயலாளா் வேந்தை சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 26 நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்த கோடை மழையால் இந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தன. அவைகளை டிஎன்சிஎஸ்சி கிட்டங்கியில் வைத்துப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெல், மிளகாய், கடலை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க வருவாய்த்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், பரமக்குடி பகுதியில் கரோனா தடுப்பூசி மையங்களை கூடுதலாக நிறுவி 45 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும்.

முன்னதாக எஸ்.சடாச்சரம் வரவேற்றாா். இதில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT