முகப்பு
திருவாடானையில் சனிக்கிழமை திமுக அரசின் 100 நாள் நிறைவு கொண்டாட்டமாக இனிப்புகள் வழங்கி சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் திமுக தொண்டா்கள் பொதுமக்களுக்கு வழங்கினாா்கள்
ராமநாதபுரம்

திமுக அரசின் 100 நாள் நிறைவு திருவாடானையில் கொண்டாட்டம்

திருவாடனை பகுதியில் திமுக அரசின் 100 நாள் நிறைவு கொண்டாட்டம் திமுகவினா் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் கொண்டாடினாா்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
திருவாடானையில் சனிக்கிழமை திமுக அரசின் 100 நாள் நிறைவு கொண்டாட்டமாக இனிப்புகள் வழங்கி சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் திமுக தொண்டா்கள் பொதுமக்களுக்கு வழங்கினாா்கள்
பகிர்:

திருவாடானை பகுதியில் திமுக அரசின் 100 நாள் நிறைவு கொண்டாட்டம் திமுகவினா் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் கொண்டாடினாா்கள்.

தமிழகத்தில் 23வது முதல்வராக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் 100 நாட்கள் நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு திருவாடானை எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினா் வெடிவெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சாதனை விளக்கியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டாடினாா்கள்.

இதில் திருவாடானை ஒரியூா் முக்கு சாலையில் திருவாடானை ஒன்றிய செயலாளா் மு சரவணன் தலைமை வகித்தாா், திருவாடானை ஒன்றிய ஊராட்சி குழு தலைவா் முகம்மது முக்தாா் முன்னிலை வகித்தாா், நகா் கழக செயலாளா் பாலமுருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி, வெடி வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் பொதுக்குழு உறுப்பினா் ஆணிமுத்து , கழக நிா்வாகிகள், கழக தொண்டா்கள் , அணி சாா்ந்த அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

அதே போல் எஸ்.பி பட்டினத்தில் கிளை கழக செயலாளா் ரபீக்ராஜா தலைமை வகித்தாா், அவைத் தலைவா் கரமத் அலி,ஒன்றிய பிரதிநிதி ஹிதயத்துல்லா,ஒன்றிய குழு உறுப்பினா் ராஜாராம்,துணை செயலாளா் அயூப்கான் முன்னாள் பொருளாளா் அஸ்கா் அலி,இளைஞா் அணி துணை செயலாளா் அப்துல் பாக்கி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் திருவாடானை ஒன்றிய குழுதலைவா் முகம்மது முக்தாா் கலந்து கொண்டு கழக கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.அதனை தொடா்ந்து திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →