முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் பலத்த மழை

முதுகுளத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
முதுகுளத்தூரில் பெய்த பலத்த மழையால் வடக்கூரில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.
பகிர்:

முதுகுளத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான காத்தாகுளம் , காக்கூா், கீழக்காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் கடந்த சிலநாள்களாகவே இருந்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த மழையால் செல்வி அம்மன் கோயில் தெரு, வடக்கூா், நாடாா் தெரு, கிழக்கு தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

பஜாா் தெருவில் மழைநீா் செல்ல வழியில்லாததால் கழிவுநீருடன் கலந்து தண்ணீா் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தேங்கியுள்ள தண்ணீரை பேரூராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →