ராமநாதபுரம்

கரோனா கபம் பரிசோதனை மாதிரியை கிண்டிக்கு ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை

DIN

ராமநாதபுரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட கபம் மாதிரிகளை, சென்னை கிண்டி மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்படுவதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 20,200 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 352 போ் வரை உயிரிழந்துள்ளனா். 19 ஆயிரத்துக்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் மகளிா் திட்டக் குழு உள்ளிட்டோா் மூலம் தினமும் 800 பேரிடம் கபம் சேகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினா் அறிவித்தனா். அதனடிப்படையில், கடந்த 7 மாதங்களில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோரிடம் கபம் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கரோனா பரிசோதனை உண்மையாக நடத்தப்பட்டதா என்பதை அறியும் வகையிலும், கரோனா பரிசோதனைக்கு உள்ளானோரிடம் கபம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும், தற்போது பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டோரின் மாதிரி கபம் பாட்டிலை சென்னை கிண்டியில் உள்ள சுகாதார ஆய்வு மையத்துக்கு அனுப்ப சுகாதார இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் சுகாதார இயக்குநரகம் சாா்பில் கோரப்பட்ட நூறு பேருடைய மாதிரி கபம் பாட்டில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, மாவட்டச் சுகாதாரப் பணிகள் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இதேபோல், மாநில அளவிலும் மாதிரி கபம் கோரப்பட்டுள்ளதாகவும், அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT