கமுதி அருகே சாலையோரம் இருந்த 5 பனை மரங்களை அரசு அனுமதியின்றி வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் வெட்டிச் சாய்த்துள்ளனா்.
கமுதி கோட்டை மேட்டிலிருந்து பசும்பொன் செல்லும் சாலையில் உள்ள பெரிய கண்மாய்க் கரையில், சாலையின் இருபுறமும் 30-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் 5-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்த்துள்ளனா். பனை மரங்களை வெட்டுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் அரசு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் பசும்பொன்னில் இந்த பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கமுதி நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பனை மரங்களை வெட்டிய மா்ம நபா்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.