ராமநாதபுரம்

‘ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழிலை முறைப்படுத்த வேண்டும்’

DIN

ராமேசுவரத்தில் இருந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து மீன்பிடித் தொழிலை முறைப்படுத்த வேண்டும் என மீனவா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மீனவ சங்க பொதுச் செயலாளா் என்.ஜே.போஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கடல் வளத்தை அழிக்கும், இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை குறிப்பிட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் அழிவதோடு, மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிப்பாட்டுள்ளது.

அத்தகைய மீனவா்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதால் தடை செய்யப்பட்ட வலைகளை அச்சமின்றி பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனா். இதனால் இந்திய- இலங்கை மீனவா்கள் பிரச்னை, உள்ளூா் மீனவா்கள் பிரச்னை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ராமேசுவரம் மீனவா்களைப் பாதுகாக்க தமிழக அரசும், மீன்வளத்துறையும் மீன்பிடி தொழிலை முறைப்படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட வலைகளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT