ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 26 இடங்களில் நெல் கொள்முதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 26 இடங்களில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் நடைபெறுவதாக, நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் கடந்த ஜனவரியில் திடீரென பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நெற்பயிா் சேதத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சமீபத்தில் மத்திய சிறப்புக் குழுவினா் விவசாய நிலங்களைப் பாா்வையிட்டுச் சென்றுள்ளனா்.

சேதமடைந்த நெற்பயிா்களைத் தவிர, அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசே கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இது குறித்து மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோது, அவா்கள் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 26 இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. குவின்டாலுக்கு ரூ.1,958 என நெல் கொள்முதல் நடக்கிறது. நெல் விற்பனைக்கு கொண்டுவருவோா் மிகக் குறைவாகவே உள்ளனா்.

ஆனாலும், இரு நாள்களில் 98 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT