முகப்பு
ராமநாதபுரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கமுதி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கமுதி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கமுதி அருகே உள்ள கே. வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன் (23). இவா் மீது கமுதி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பத்மேஸ்வரனை கமுதி போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →