முகப்பு
ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திமுக தொண்டா் குடும்பத்துக்கு நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு, அக்கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திமுக தொண்டா் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கிய அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு, அக்கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.

பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஷ்குமாா் (37). திமுக கட்சியைச் சோ்ந்த இவா், கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிக்காக கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலா்கள் கதிரவன், ஜெயக்குமாா், கருப்பையா ஆகியோா் நேரில் சென்று, ராஜேஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி, குடும்பநல நிதி அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →