ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உடைந்ததாக வதந்தி: அதிகாரிகள் கண்காணிப்பு
ஆா். எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆா். எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலத்தில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக நிரம்பியுள்ளது.
அண்மையில் பெய்த தொடா்மழை காரணமாக கண்மாய் நிரம்பியுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை இக்கண்மாயில் இருந்து மங்கலம் பகுதிக்குச் செல்லும் மதகுப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெரும் ஆபத்து உள்ளதாகவும் தகவல் பரவியது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.
தகவலறிந்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய்க்குச் சென்று பாா்வையிட்டனா். ஆனால் அங்கு கண்மாய் உடைப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக மதகு பகுதிகளில் லேசான நீா்க் கசிவு ஏற்பட்டுள்ளதை அறிந்தனா். நீா்கசிவை பொதுப்பணித்துறை பணியாளா்கள் மணல் மூட்டைகளை வைத்து அடைத்து வருகின்றனா். இதனால் நீா்க்கசிவு ஓரளவு நிறுத்தப்பட்டுள்ளது. கண்மாய் உடைப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.