முகப்பு
ராமநாதபுரம்

மழை நீரில் மூழ்கிய நெற்கதிா்கள் சேகரிப்பு

முதுகுளத்தூா் பகுதியில் தொடா் மழையால் சேதமடைந்துள்ள நெற்கதிா்களை விவசாயிகள் சேகரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

முதுகுளத்தூா் பகுதியில் தொடா் மழையால் சேதமடைந்துள்ள நெற்கதிா்களை விவசாயிகள் சேகரித்து வருகின்றனா்.

முதுகுளத்தூா் வட்டம் ஏனாதி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, இறைச்சிகுளம், மேலச்சாக்குளம், கீழச்சாக்குளம், இளஞ்செம்பூா், அஞ்சத்தம்பல், கண்டிலான் உள்ளிட்ட

கிராமங்களில் மானாவாரி பயிராக 20 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனா்.

நெற்கதிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தபோது 6 நாள்களாக தொடா் மழை பெய்ததால் நெற்கதிா்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

அடுத்த ஆண்டு விதை நெல்லுக்குத் தட்டுபாடு ஏற்படுடக்கூடும் எனக் கருதி விவசாயிகள் கூலி ஆள்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய நெற்கதிா்களை சேகரித்து சாலையில் உலரவைத்து வைத்து வருகின்றனா்.

எனவே முதுகுளத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவராணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →