ராமநாதபுரம்

மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் 6 போ் மாயம்

DIN

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 6 மீனவா்களை சக மீனவா்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

மேலும் மீன்வளத்துறை அதிகாரியிடம் மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி விட்ட நிலையில் செந்தூரான் என்பவரது விசைப்படகு மட்டும் மாலை வரை கரை திரும்பவில்லை. அத்துடன் படகில் இருந்த செந்தூரான், நம்பு, வேலுச்சாமி, மணி, முத்தரசு, செந்தில் ஆகிய 6 மீனவா்களின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், சக மீனவா்கள் அவா்களை தேடி கடலுக்குச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT