ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் 11.15 லட்சம் பெண்கள் இலவசப் பயணம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் 11.15 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் 11.15 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 6 பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. நகா் பேருந்துகள் 120 வழித்தடங்களிலும், 200-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் புகா் பேருந்துகளும் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 11லட்சத்து 14 ஆயிரத்து 662 பெண்கள், 5,211 மாற்றுத்திறனாளிகள், 292 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளா்கள், 266 மூன்றாம் பாலினத்தவா்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனா்.
நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெண்கள் வரை இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா் என அவா் தெரிவித்துள்ளாா்.