ராமநாதபுரம்

மண்டபம் கடற்கரையில் மீனவா்கள் நூதனப் போராட்டம்

DIN

பாரம்பரிய மீனவா்களை பாதிக்கும் கடல் மீன்வள மசோதா 2021-ஐ ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி மண்டபம் கடற்கரையில் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தியும், காதில் பூ சுற்றியும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்டபம் தோணித்துறை கடல் பகுதியில் கடற்தொழிலாளா்கள் சங்கம், பாரம்பரிய மீனவா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கிராமத் தலைவா் பால்ச்சாமி தலைமை வகித்தாா். மகளிரணி செயலாளா் மனோகரி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் கருப்பையா, சீனிவாசன், பொருளாளா் சுடலை காசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடல் தொழிலாளா் சிஐடியு சங்க மாவட்டச் செயலாளா் கருணாமூா்த்தி சிறப்புரையாற்றினா்.

இதில் பாரம்பரிய மீனவா்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையிலான இந்திய கடல் மீன்வள மசோதா 2021-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் சா்வதேச மீன்பிடியால் அந்நிய நாட்டு கப்பல்கள் மூலம் இந்தியக் கடல் வளம் அழியும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT