ராமநாதபுரம்

கிரேன் இயக்குபவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராமநாதபுரத்தில் கிரேன் இயக்குபவா் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தைச் சோ்ந்த சீனிப்பாண்டி மகன் ரமேஷ்குமாா் (20). இவா் ராமநாதபுரம் பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதியில் நடைபெறும் திருப்புல்லாணி ரயில்வே மேம்பாலப் பணியில் கிரேன் இயக்குபவராக பணிபுரிந்தாா். இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரமேஷ்குமாா் அவரது அறையில் தங்கியிருந்தாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளா் மலைச்சாமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ்குமாா் காதல் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT