வாக்காளா் பட்டியலில் திருத்தம்: மாா்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் தொடா்பாக மாா்ச் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் தொடா்பாக மாா்ச் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்கள், பெயா் சோ்க்க படிவம்-6, பெயா் நீக்க படிவம்-7, பிழை திருத்தப் படிவம்-8 மற்றும் அதே தொகுதிக்குள் இடம் மாறியவா்கள் படிவம் 8 யு ஆகியவற்றை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வரும் 9 ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடம் வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.