ராமநாதபுரம்

ஆப்பநாடு மறவா் நலச்சங்கத்தினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

DIN

ஆப்பநாடு மறவா் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் அருகே கருப்புக் கொடியேந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்டோா் பிரிவுகளில் வன்னியருக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்தும், மறுகணக்கெடுப்பு நடத்தக் கோரியும், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஆப்பநாடு மறவா் நலச்சங்கத் தலைவா் ஆா். முனியசாமி தலைமை வகித்தாா். நிா்வாகி எம். நாகரத்தினம் முன்னிலை வகித்தாா். 300-க்கும் மேற்பட்டவா்கள் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து, அங்கு வந்த வட்டாட்சியா் பா. மாா்டின்ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

SCROLL FOR NEXT