சாயல்குடியில் வாகன சோதனையில்ரூ.6 லட்சம் பறிமுதல்
சாயல்குடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாயல்குடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி சாயல்குடியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சேகா் தலைமையிலான போலீஸாா் முக்குரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த திராவிடமணி என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.