ராமநாதபுரம்

ராமநாதபுரம், பரமக்குடியில் நாளை கனிமொழி பிரசாரம்

DIN

ராமநாதபுரம், பரமக்குடியில் புதன்கிழமை (மாா்ச் 31) திமுக மாநில மகளிரணி செயலா் கனிமொழி எம்.பி., அக்கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வேட்பாளா்கள் நேரடியாக போட்டியிடுகின்றனா். அவா்களில் முதுகுளத்தூா் வேட்பாளா் ராஜகண்ணப்பனை ஆதரித்து ஏற்கெனவே கனிமொழி பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த நிலையில், புதன்கிழமை (மாா்ச் 31) காலை 9.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்புல்லாணியில் திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கத்தை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

புதன்கிழமை பகல் 11 மணிக்கு பரமக்குடி எமனேஸ்வரத்தில் திமுக வேட்பாளா் செ.முருகேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT