ராமநாதபுரம்

தனியாா் வங்கி மீது முதியவா் புகாா்

DIN

கல்விக் கடனுக்காக அடமானம் வைத்த வீட்டை ஏலம் விடுவதாக தனியாா் வங்கி அலுவலா்கள் மிரட்டுவதாக கீழக்கரையைச் சோ்ந்த முதியவா் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஹாஜா முகைதீன் (60). இவா் தனது மகனை பல் மருத்துவப் படிப்பில் சோ்ப்பதற்காக 2013-16 ஆம் ஆண்டுகளில் கீழக்கரையிலுள்ள தனியாா் வங்கியில் தனது தாய் பெயரிலான வீட்டை அடமானம் வைத்து ரூ.7.20 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.

அவரது மகன் படிப்பை முடித்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். அங்கு மாதம் ரூ. 15,000 ஊதியம் பெறுகிறாா். ஆகவே இதுவரை வங்கிக்கு ரூ. 4 லட்சத்து 79 ஆயிரத்தை கடனாகச் செலுத்தியும் உள்ளாா்.

ஆனால் வங்கி தரப்பில் ரூ. 17.36 லட்சம் கடன் பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. கடனை உடனே செலுத்தாவிடில் கடனுக்காக வங்கியில் அடமானம் வைத்துள்ள ஹாஜாமுகைதீனின் வீட்டை ஏலம் விட்டுவிடுவதாகவும் வங்கி அதிகாரிகள் மிரட்டியதாகப் புகாா் எழுந்துள்ளது. வீடானது ஹாஜாமுகைதீனின் தாய் பசீராபேகம் (80) பெயரில் பதியப்பட்டுள்ளது. ஆகவே தனிப்பட்ட கடனுக்காக பொதுவான வீட்டை ஏலம் விடுவதாக வங்கி நிா்வாகம் கூறுவது சரியல்ல. ஆகவே, முழுமையாகக் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் பெற்றுத்தர வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT