முகப்பு
ராமநாதபுரம்

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின விடுதிகளில் மாணவா் சோ்க்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் பள்ளி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்த

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் பள்ளி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா், சிறுபான்மையினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு 33 விடுதிகளும், மாணவியருக்கு 22 விடுதிகளும் உள்ளன. கல்லூரியில் படிக்கும் அந்த வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 4 விடுதிகளும், மாணவியருக்கு 5 விடுதிகளும் என மாவட்டத்தில் மொத்தம் 64 விடுதிகள் உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவா்கள் இந்த விடுதிகளில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோ்க்கப்படுகின்றனா்.

விடுதிகளில் சோ்வதற்கு, பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையம் குறைந்த பட்சம் 8 கி.மீ. க்கு அதிகமாக இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருத்தாது.

தகுதியானோா் விண்ணப்பகளை விடுதி காப்பாளா்களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி மற்றும் கல்லூரி விடுதி காப்பாளா்களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →