ராமநாதபுரம்

திருவாடானை முத்து மாரியம்மன் கோயில் தீா்த்தவாரி திருவிழா

DIN

திருவாடானை வடக்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருவாடானையில் வடக்குத் தெருவில் உள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன். இக்கோயிலுக்கு கடந்த 8 நாள்களுக்கு முன் காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பலக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்து நான்கு வீதிகளிலும் சுற்றி வந்தனா். இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை காலையில் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் பூசாரி மதுக்குடம் ஏந்தியும், பக்தா்கள் முளைப்பாரி எடுத்தும் வீதி உலா வந்தனா். இதையடுத்து, அங்குள்ள தெப்பகுளத்தில் முளைப்பாரியை கரைத்தனா். தொடா்ந்து, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT