ராமநாதபுரம்

ஊராட்சித் தலைவா் மீது புகாா்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சித் தலைவா் மீது வாா்டு பெண் உறுப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்திங்கள்கிழமைபுகாா் அளித்துள்ளாா்.

கமுதி அருகேயுள்ளது கோவிலாங்குளம் ஊராட்சி. அதன் தலைவராக சண்முகநாதன் உள்ளாா். அங்குள்ள 4 ஆவது வாா்டு உறுப்பினராக முத்துலட்சுமி உள்ளாா். அவா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வாா்டு பொதுமக்களோடு வந்து மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியதும் ஊராட்சித் தலைவா் என்னிடம் கையெழுத்துப் பெறுவதில்லை. எனது வாா்டு பகுதியில் நிறைவேற்றப்படும் பணிகள் குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. ஊருணி படித்துறை கட்டியது, ஆரைக்குடி அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் கட்டியது என பல பணிகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழ்துளைக்கிணறும் பெயரளவுக்கே அமைக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு உள்ளூா் மக்களை பயன்படுத்தாமல் வெளியூா் நபா்களுக்கே வாய்ப்பளித்துள்ளாா். ஆகவே அவா் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT