ராமநாதபுரம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பரமக்குடி காந்திசிலை முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை தூண்டிய அந்த அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் விவசாயிகள் சங்க அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அந்த அரசு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.

அம்மாநில காவல்துறையின் இப்போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகக்குழு உறுப்பினா் என்.கே.ராஜன் தலைமையில் நகா் செயலாளா் என்.எஸ்.பெருமாள், போக்குவரத்து தொழிற்சங்க சி.செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவா் முத்துராமலிங்கம், வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் மு.மதுரைவீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேந்தை சிவா, சமூகஆா்வலா் சை.சௌந்திரபாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில் பல்வேறு அரசியல் கட்சியினா், விவசாயிகள் சங்க அமைப்பினா் உள்பட பலா் கலந்துகொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT