ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே விபத்தில் அரியவகை மரநாய் உயிரிழப்பு

DIN

ராமநாதபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற அரியவகை மரநாய் வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் மிக அரிய வகை உயிரினமான மரநாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சியா் அலுவலகம் உள்ள பட்டினம்காத்தான் ஊராட்சியில் சேதுபதி நகா் பகுதியில் மரநாய்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் புதிய காவல் சோதனைச்சாவடி அருகே சுமாா் இரண்டரை அடி நீளமுள்ள மரநாய் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் உதவி வனப் பாதுகாவலா் கணேசலிங்கம் தலைமையிலான வனவா்கள் மரநாயின் சடலத்தை மீட்டனா்.

இந்த மரநாய் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் மரநாய்க்கு சுமாா் 2 வயதிருக்கலாம் என்றும் வன அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து மரநாய் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT