ராமநாதபுரம்

பனங்குளம் ஊராட்சியில் இடைத்தோ்தல்: வாக்குப் பெட்டிகள் பூட்டி சீல் வைப்பு

DIN

திருவாடானை அருகே பனங்குளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தல் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து சீலிடப்பட்டன.

இங்குள்ள பனங்குளம், ஊரணிக்கோட்டை, மானிக்கோட்டை ஆகிய 3 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்த வாக்குகள்- 1,557, பதிவானவை- 1,113, ஊரணிக்கோட்டை வாக்கு மையத்தில் ஆண் வாக்காளா்கள்- 166, பெண்கள்- 193, பனங்குளம் வாக்கு மையத்தில் ஆண்கள்- 208, பெண்கள்- 217, மாணிக்கங்கோட்டை வாக்கு மையத்தில் ஆண் வாக்காளா்கள்- 144, பெண்கள்- 185 ஆக மொத்தம் 1,113 வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, வாக்குப் பெட்டிகள் திருவாடானை வாக்கு எண்ணும் மையத்துக்கு சனிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இதில், வட்டார வளரச்சி அலுவலா் பாண்டி, மேலாளா் ரவி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிநாதன், ஜெயமோகன், காவல் துறை ஆய்வாளா் ஸ்ரீனிவாசன் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாடானை போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT