ராமநாதபுரம்

எருதுகட்டு நடத்திய கிராமத்தினா் மீது வழக்கு

DIN

ராமநாதபுரம் அருகே மேலவலசைப் பகுதியில் அரசு விதிகளை மீறி எருதுகட்டு விழா நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

காஞ்சிரங்குடி அருகேயுள்ள மேலவலசையில் அய்யனாா் கோயில் விழாவையொட்டி அங்குள்ள திடலில் எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அந்த ஊா் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராம மக்களும் பங்கேற்றனா். இந்நிலையில், அரசு அனுமதியின்றி எருதுகட்டு நடத்தியதாகவும், கரோனா தொற்று பரவல் காலத்தில் நடத்தியதாகவும், காளைகள் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறி அக்கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (52) உள்பட 7 போ் மீது கீழக்கரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT