ராமநாதபுரம்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: தொழிலாளி கைது

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆடு வளா்ப்பவரது வீட்டில் நகை மற்றும் பணத்தைத் திருடிய தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகே காருகுடியைச் சோ்ந்தவா் இருளாண்டி (66). இவா் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். ஆடுகளை மேய்ப்பதற்காக அதே ஊரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (47) என்பவரை நியமித்திருந்தாா்.

இருளாண்டி மகன்கள் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவா் தனது மனைவியுடன் சில நாள்களுக்கு முன்பு வெளியூா் சென்றிருந்தாா். அப்போது அவரது வீட்டுக்குள் முத்துராமலிங்கம் புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் சங்கிலி, ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்ாக புகாரளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராமலிங்கத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT