முகப்பு
ராமநாதபுரம்

திருப்புல்லாணி கோயிலில் ராமாயண மகா வேள்வி

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ராமாயண மகாவேள்வியை ராமானுஜ சின்ன ஜீயா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ராமாயண மகாவேள்வியை ராமானுஜ சின்ன ஜீயா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இங்கு உலக அமைதிக்கும், ஆன்மிக பலத்தை ஏற்படுத்தவும் ராமாயண மகா வேள்வி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து, ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜா் சிலையை நிறுவிய தண்டி ராமானுஜ சின்ன ஜீயா் வெள்ளிக்கிழமை காலை மகா வேள்வியைத் தொடக்கி வைத்தாா்.

வேள்வியில் ராமாயண சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இதையடுத்து, சின்னஜீயா் அங்கு சிறப்பு பூஜைகளையும் நடத்தி பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

முன்னதாக சமஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோா் ஜீயரை வரவேற்றனா். வேள்வி சனிக்கிழமை (ஏப். 9) நிறைவடையும் என கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. நாலாயிரத் திவ்யபிரபந்தம், வேதபாராயணம், உபன்யாசம் உள்ளிட்டவை பாடப்படும் எனவும் வேள்வியை ஏற்பாடு செய்தவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →