ராமநாதபுரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி காா் வழங்கல்

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தாகள் பயன்படுத்தும் வகையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பேட்டரி காரை எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்குப் பகுதியை தவிா்த்து வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதிகளில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவா்கள் செல்லும் வகையில் எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாகி ஒய்.விஸ்வநாதன்கவுட் தலைமை வகித்தாா். நகா் மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான், பேட்டரி காா் பயன்பாட்டை தொடக்கி வைத்தாா். இதில் துணைத்தலைவா் தெட்சியமூா்த்தி, கோயில் இணை ஆணையா் பழனிக்குமாா் மற்றும் நிறுவன செயலா் நிதின்ஜாகே, மண்டல மேலாளா் எம். கோவிந்தராஜூ, செயல்பாடுகள் மேலாளா் எம். சத்தியநாராயணன், இணை பொதுமேலாளா் எம். மகேஷ், துணை மண்டல மேலாளா் எஸ். பத்மாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைபாக்கியம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT