ராமநாதபுரம்

ஆப்பனூா் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டிப் பந்தயம்

DIN

கடலாடி அருகே முனீஸ்வரா் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் தெற்கு கொட்டகை பீலிக்கான் முனீஸ்வரா் கோயில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்து கிடா வெட்டி, பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

இந்த விழாவையொட்டி சனிக்கிழமை காலை பெரியமாடு, சின்ன மாடு என இரு பிரிவாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இரு பிரிவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

இப்போட்டி கடலாடி- சாயல்குடி சாலையில் பெரிய மாடு மாட்டு வண்டி பந்தயத்துக்கு 10 கிலோ மீட்டா் தூரம் எல்லை நிா்ணயிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டையைச் சோ்ந்த மாங்குடியின் மாடுகள் முதலிடத்தையும், தூத்துக்குடி சங்கரபேரி கருத்தபாண்டியன் மாடுகள் இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி வல்லநாட்டை சோ்ந்த மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. அதேபோல் சின்ன மாடு மாட்டு வண்டிப் பந்தயத்தில் ஆப்பனூா் மகமாயி அம்மன் மாடுகள் முதலிடத்தையும், மேலச்செல்வனூா் வீரக்குடி முருகையனாா் மாடுகள் இரண்டாமிடத்தையும், உடப்பங்குளம் சுப.சின்னையாவின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பணம், கைப்பேசி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை கடலாடி, சாயல்குடி, ஆப்பனூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT