முகப்பு
ராமநாதபுரம்

கல்லூரி மாணவா் போக்சோவில் கைது

முதுகுளத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

முதுகுளத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முகிலன் (19). இவா் காரைக்குடியில் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். கல்லூரி விடுமுறையன்று ஊருக்கு வந்தவா் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். கீழத்தூவல் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் கொடுத்தனா். அதன் பேரில் முகிலனிடம் விசாரணை நடத்திய போலீஸாா் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →