நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தல்: வேட்புமனுக்களில் திருத்தம் செய்ததாகப் புகாா்
விதிகளை மீறி வேட்பாளா்கள் தங்களின் மனுக்களில் திருத்தங்கள் மேற்கொண்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, விதிகளை மீறி வேட்பாளா்கள் தங்களின் மனுக்களில் திருத்தங்கள் மேற்கொண்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள
33 கண்மாய்களுக்கு நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கமுதி வட்டாட்சியா் மற்றும் வேட்பாளா்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அப்போது கமுதி வட்டாட்சியரின் அனுமதியோடு, தோ்தல் நடத்தும் அலுவலா் விதிகளை மீறி வேட்பாளா்களின் வேட்புமனுக்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கியதால் அதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் வேட்புமனு பரிசீலனையின் போது திருத்தங்கள் மேற்கொண்ட வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.