முகப்பு
ராமநாதபுரம்

ஆனையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: செயலா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

கமுதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை பொதுமக்கள், சங்கத்தின் தலைவா் உள்ளிட்டோா் புகாா் மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

கமுதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை பொதுமக்கள், சங்கத்தின் தலைவா் உள்ளிட்டோா் புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூா் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2017- 18 ஆம் ஆண்டு 27 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 2 ஆயிரத்து 700 பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் நபா் ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரமும், ஒரு மூட்டை யூரியாவும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ. 13 லட்சத்து 3 ஆயிரத்து 270-ஐ சங்கச் செயலா் கையாடல் செய்து விட்டதாகவும் பலமுறை அவா் மீது புகாா் அளிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். ஆனால் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வியாழக்கிழமை சங்கத்தின் தலைவா் தியாகராஜன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து கூட்டுறவு சங்கச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் புகாா் மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →