ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் 3 தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் ஆக. 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் 3 தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் ஆக. 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வி. குமரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் (2022-23) மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆக 25 ஆம் தேதி வரையில் நடைபெறுகின்றன.
கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் திறன் மேம்பாட்டு துறை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி தொழிற்பயிற்சி மையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50 செலுத்த டெபிட்காா்ட், கிரெடிட், வளைதள வங்கி சேவை, ஜி-பே வாயிலாகவும் செலுத்தலாம். விண்ணப்பத்தை வரும் ஆக. 25 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்று, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் 3 அரசு தொழிற்பயிற்சி மையங்களை அணுகி இலவசமாகவும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.