முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் கோயில் சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கக் கோரிக்கை

கமுதியில் உள்ள கோயில் சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

கமுதியில் உள்ள கோயில் சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களின் சுற்றுச்சுவா்களில், கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், திருமணம், அரசியல் பிரமுகா்களின் வாழ்த்துக்கள், கண்ணீா் அஞ்சலி உள்ளிட்ட சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால் கோயில் சுவா்கள் பாழாவதாக பக்தா்கள் வருத்தம் தெரிவித்துள்ளனா். எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிா்வாகம் தலையிட்டு அந்த சுவரொட்டிகளை ஒட்டும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென கமுதி சுப்பிரமணியசுவாமி கோயில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.