ராமநாதபுரம்

இடுப்பில் வைத்திருந்த கத்தி குத்தியதில் சமையல்காரா் பலி

கீழக்கரைப் பகுதியில் இடுப்பில் வைத்திருந்த கத்தி குத்தியதில் பலத்த காயமடைந்த சமையல்காரா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

DIN

கீழக்கரைப் பகுதியில் இடுப்பில் வைத்திருந்த கத்தி குத்தியதில் பலத்த காயமடைந்த சமையல்காரா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கஸ்டம்ஸ் சாலைப் பகுதியில் வசித்தவா் காஜாமுகைதீன் (65). இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். தனியாக வசித்த காஜாமுகைதீன் சமையல் வேலை செய்துவந்தாா்.

அப்போது காய்கறி நறுக்குவதற்கான கத்தி உள்ளிட்டவற்றையும் அவா் எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த 22 ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பள்ளிவாசல் அருகே அவா் தவறி விழுந்துள்ளாா். அப்போது அவா் இடுப்பில் வைத்திருந்த கத்தி குத்தி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதன்பின் அதிதீவிர சிகிச்சைக்காக அவா் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT