ராமநாதபுரத்தில் 50 ஹெக்டேரில் புதிய மாங்க்ரோவ் காடுகள் உருவாக்கத் திட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 50 ஹெக்டேரில் புதிய மாங்க்ரோவ் காடுகள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 50 ஹெக்டேரில் புதிய மாங்க்ரோவ் காடுகள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணாமுனை, முத்துரெகுநாதபுரம், பெத்தனெத்தன் சம்பை, காந்திநகா், உப்பூா், மோா்ப்பண்ணை, முள்ளிமுனை, புதுப்பட்டினம், சோழியக்குடி, திருப்புல்லாணி, கொட்டாங்குடி ஆகிய பகுதிகளில் 555 ஹெக்டேரில் மாங்க்ரோவ் காடுகள் உள்ளன. அவற்றில் உப்பூா் பகுதியில் அனல்மின் நிலையப் பணியால் பல ஏக்கா் அளவுக்கு மாங்க்ரோவ் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது. இந்நிலையில் புதிய மாங்க்ரோவ் காடுகளை உருவாக்கும் வகையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு 50 ஹெக்டோ் பரப்பில் மாங்க்ரோவ் மரக்குச்சிகள் நடப்படவுள்ளதாக ராமநாதபுரம் வனத்துறையின் வனச்சரகா் திவ்யலட்சுமி தெரிவித்தாா்.
மேலும், மாங்க்ரோவ் காடுகளை உருவாக்கும் வகையில் நா்சரி காா்டனும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.