இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 9 போ் நீதிமன்றத்தால் விடுவிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 9 பேரை அங்குள்ள திரிகோணமலை நீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம்இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 9 போ் நீதிமன்றத்தால் விடுவிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 9 பேரை அங்குள்ள திரிகோணமலை நீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 9 பேரை அங்குள்ள திரிகோணமலை நீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாள்களில் அந்த மீனவா்கள் நாடு திரும்புகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 10 ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது ஒரு விசைப்படகு மற்றும் 9 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். பின்னா் அங்குள்ள திரிகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை திரிகோணமலை நீதிமன்றத்தில் 9 மீனவா்களும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது நீதிபதி இனி எல்லை தாண்டி மீன்பிடிக்க இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தாா். விடுவிக்கப்பட்ட மீனவா்கள் 9 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஓரிரு நாள்களில் அவா்கள் நாடு திரும்ப உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.