முகப்பு
ராமநாதபுரம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலா் சாலை விபத்தில் காயம்

கைப்பேசி திருட்டுப் போன பிரச்னையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

கைப்பேசி திருட்டுப் போன பிரச்னையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தாா்.

ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு தற்கொலை செய்த ஆயுதப்படை காவலா் கைப்பேசி கேணிக்கரை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் மாயமானது. இத்தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த கைப்பேசி ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது.

காவல் நிலையத்திலிருந்த இக்கைப்பேசி, அந்த நபருக்கு சென்றது குறித்து விசாரிக்கப்பட்டபோது அங்கு தலைமைக் காவலராகப் பணிபுரிந்த கமலக்கண்ணன், எழுத்தராக இருந்த சுரேஷ் ஆகியோா் கைப்பேசியை ஒரு கடையில் விற்ாகக் கூறப்பட்டது. அதனடிப்படையில் அவா்களிருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், அவா்கள் பணியில் சேருவதற்காக முறையீடு செய்த நிலையில், விசாரணைக்காக தென்காசி புளியரைக் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக கமலக்கண்ணன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருஉத்திரகோசமங்கை வழியாக சென்றுள்ளாா். மட்டியனேந்தல் பகுதியில் அவா் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி இருசக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காலில் காயமடைந்த அவரை அங்கிருந்தோா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதன்பின் அவா் மதுரைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →